Wednesday, November 30, 2011

ஒரு புதிய பயணம்...



ஒரு வருடமாகப் போகிறது வெகு நாட்களாக வாங்க வேண்டுமென்று திட்டமிருந்த ஒரு கேமராவை வாங்கி. பெண்டாக்ஸ் x90. SLR இல்லை. எனக்கேற்ற மாதிரி ஓரளவு கைக்கடக்கமான அளவில் விலையில் கொஞ்சம் எதிர்பார்த்த சில அம்சங்களும் கொண்டிருந்தது. இத்தனை நாளும் கொஞ்சமாவது சுமாரான போட்டோக்களை எடுக்க முயல்வதிலேயே கழிந்தது. ஒரு நல்ல நிழற்படத்தைக் கொடுக்க ஒவ்வொரு போட்டோகிராபரும் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பது புரிந்துவிட்டது :) எவ்வளவு திட்டமிடுதல், எவ்வளவு பொறுமை, எவ்வளவு தொடர்ந்த முயற்சி என அது கண்டிப்பாக ஒரு கலை. எல்லாக் கலையும் ஒரு தியானம். அதற்கான ஒரு அழைப்பும் உள்ளார்ந்த ஆர்வமும் இல்லாவிட்டால் அதன் பலனை கண்டிப்பாக அனுபவிக்க முடியாது. மேற்சொல்லப்பட்ட ஒவ்வொரு குணநலனுக்கும் எனக்குமே ரொம்ப தூரம் என்பதால் இதை அனேகமாக சைடுக்கா ஒரு பொழுதுபோக்காக மட்டும் வைத்து கெளரவமாக சொல்லிக் கொள்ளலாம் என்பது தற்போதைய எண்ணம்.

இவ்வளவு நாட்களாக தடவி தடவி கொஞ்சம் சுமாரான போட்டோக்கள் வந்திருப்பதாய் நானே நம்ப(?!) ஆரம்பித்துவிட்டதால் இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கிறீர்கள். விதியை யாராலும் வெல்ல முடியாது.
கெட் செட். ரெடி. கோ!

1 comment:

  1. வாழ்த்துகள்.. உங்கள் புகைப்பட பயணம் தொடரட்டும்

    ReplyDelete